ஹயோசங் பிராண்டில் வரும் புதிய 150சிசி பைக் மாடல்
இந்திய மார்க்கெட்டுக்காக புதிய 150சிசி மற்றும் 200சிசி பைக் மாடல்களை அறிமுகப்படுத்த ஹயோசங் திட்டமிட்டுள்ளது.
இந்திய பிரிமியம் பைக் மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிமியம் பிராண்டுகளில் ஒன்று ஹயோசங். அதிக எண்ணிக்கையிலான விற்பனை பதிவை ஹயோசங் மாடல்கள் பதிவு செய்து வருகின்றன.

விற்பனை கொடுத்து வரும் ஊக்கத்தால், இந்திய மார்க்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஹயோசங் பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட திட்டமிட்டுள்ளது.
அதில் முக்கியமானதாக ஜிடி250என் பைக் கருதபப்பட்டு வந்தது. இந்த நிலையில், அடுத்ததாக இந்தியாவுக்காக 150சிசி மற்றும் 200சிசி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதியில் புதிய 150சிசி மற்றும் 200சிசி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக் மாடல்கள் ஹோண்டா சிபிஆர் 150ஆர், யமஹா ஆர்15, பஜாஜ் பல்சர் 200என்எஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும்.
மேலும், 250சிசி முதல் 700சிசி வரையிலான செக்மென்ட்டில் பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட இருப்பதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான பைக் மாடல்கள் தங்கள் கைவசம் இருக்கும் என்றும் ஹயோசங்- டிஎஸ்கே மோட்டார்ஸ் கூட்டணி தெரிவித்துள்ளது. இதற்காக, புதிய ஆலை ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








