புதிய ஹயோசங் அக்குய்லா 250சிசி க்ரூஸர் பைக் விற்பனைக்கு வந்தது - விபரம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த நிகழ்ச்சியில் டிஎஸ்கே- ஹயோசங் கூட்டணியின் புதிய அக்குய்லா 250 சிசி க்ரூஸர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே 650சிசி அக்குய்லா க்ரூஸர் பைக் விற்பனையில் இருக்கும் நிலையில், இந்த புதிய பைக் 250சிசி திறன் கொண்ட பிரிமியம் பைக் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் வி ட்வின் சிலிண்டர் கொண்ட 249சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்
இந்த பைக்கின் எஞ்சின் 26.21 பிஎச்பி பவரையும், 21.37 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது.

பிரேக்
முன்புறத்தில் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹைட்ராலிக் டபுள் ஷாக் அப்சார்பரும் உள்ளன.

குரோம் பினிஷ்
எஞ்சின் பாகங்களில் குரோம் பினிஷிங் செய்யப்பட்டுள்ளன. டியூவல் டோன் கலர் கொண்டதாக இருப்பது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கிறது.

இருக்கை
இந்த க்ரூஸர் பைக்கில் சொகுசாக அமர்ந்து செல்லும் வகையில் சிறப்பான டிசைன் கொண்ட இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

விலை
ரூ.2.69 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு
இந்த புதிய பைக்குக்கு முன்பதிவும் துவங்கப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications








