அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறதா புதிய ஹயோசங் ஜிடி 250என்?
அடுத்த மாதம் புதிய ஹயோசங் ஜிடி250என் பைக் விற்பநைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹயோசங் மூன்று மாடல்களில் இதுவும் ஒன்று.
மேலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மூன்று மாடல்களில், ஹயோசங் அக்குய்லா 250சிசி க்ரூஸர் பைக் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, அடுத்த மாடலாக ஜிடி250 என் பைக்கை டிஎஸ்கே- ஹயோசங் கூட்டணி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.

நேக்டு ஸ்டைல் கொண்ட இந்த ஹயோசங் ஜிடி250என் பைக்கில் 249சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இருக்கிறது. இந்த பைக் 28 எச்பி ஆற்றலையும், 24 என்எம் டார்க்கை அளிக்கும். இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
இருசக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டதாக வரும் இந்த பைக் 145 கிலோ எடை கொண்டது. ரூ.1.9 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








