இந்தியா வரும் புதிய இத்தாலியன் பிராண்டு பைக்குகள்!

By Saravana

கொரியாவை சேர்ந்த ஹயோசங் பிராண்டு பைக்குகளை விற்பனை செய்து வரும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் அடுத்ததாக இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனத்தின் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

டிஎஸ்கே நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய பெனெல்லி பிரிமியம் பைக்குகளை அசெம்பிள் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனால், மிக சரியான விலையில் இத்தாலிய பிரிமியம் பைக்குகளை வாங்கும் வாய்ப்பு இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.


பெனெல்லி எஞ்சின்கள்

பெனெல்லி எஞ்சின்கள்

300சிசி பேரலல் ட்வின் கொண்ட ஒரு பைக் மாடலும், 600சிசி எஞ்சின் மூன்று பைக் மாடல்களும், 898சிசி எஞ்சின் கொண்ட ஒரு பைக் மாடலும், 1,131சிசி எஞ்சின் கொண்ட மூன்று பைக் மாடல்களையும் பெனெல்லி தயாரித்து விற்பனை செய்கிறது. ஆக 8 பைக் மாடல்கள் பெனெல்லி வசம் இருக்கிறது.

ஆவலை கிளப்பும் மாடல்

ஆவலை கிளப்பும் மாடல்

பெனெல்லியின் 8 பிரிமியம் பைக் மாடல்களில் 300சிசி பேரலல் ட்வின் எஞ்சின் கொண்ட என்ட்ரி லெவல் பிஎன்302 என்ற நேக்டு ஸ்டைல் மாடல் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், 600சிசி பிரிவில் வரும் பைக்கும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்ற தகவலால் மிக சரியான விலையில் இந்த பைக்குகளை பெறும் வாய்ப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். பிஎன்302 பைக் மாடல் கேடிஎம் டியூக் 390 பைக்குடன் நேரடியாக மோதும்.

அறிவிப்பு

அறிவிப்பு

வரும் 17ந் தேதி இந்தியாவில் பெனெல்லி பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வருவது பற்றி அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2014, 12:38 [IST]
English summary
According to the sources, the Italian motorcycle brand Benelli is coming to India, via Pune-based DSK Motowheels. Launch of in India is set to take place on 17th October 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+