பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் 'வயர்லெஸ்' ஏர்பேக்: டுகாட்டி அறிமுகம்!
வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் பைக்குகளுக்கான புதிய ஏர்பேக் சிஸ்டத்தை டுகாட்டி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தில் வரும் உலகின் முதல் பைக் ஏர்பேக் தொழில்நுட்பமாக டுகாட்டி இதனை குறிப்பிடுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா பைக்கில் முதல்முறையாக வருகிறது. இந்த ஏர்பேக்கின் செயல்படும் விதம், சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டுகாட்டி பைக்
இந்த புதிய ஏர்பேக் தொழில்நுட்பத்தை தனது மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்கில் டுகாட்டி அறிமுகப்படுத்துகிறது. இந்த ஏர்பேக் சிஸ்டம் கொண்ட பைக் மல்டிஸ்ட்ரேடா டி ஏர் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.

ஏர்பேக் சிஸ்டம்
டெய்னிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய பைக் ஏர்பேக்கை டுகாட்டி வடிவமைத்துள்ளது. ரைடர் அணிந்திருக்கும் ஏர்பேக் அடங்கிய ஜாக்கெட்டில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் பைக்கை ஓட்டுபவர் கீழே விழும் நிலை ஏற்படுவதை உணர்ந்து பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ கருவிக்கு வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சமிக்ஞைகளை அனுப்பும் . இதையடுத்து, கண்மூடி கண் திறப்பதற்குள், அதாவது 45 மில்லி செகண்டில் ஓட்டுபவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் ஏர்பேக்காக விரிந்து பாதுகாப்பை வழங்கும்.

அறிமுகம்
அடுத்த மாதம் 15ந் தேதி இந்த புதிய ஏர்பேக்கின் கூடுதல் தகவல்களை டுகாட்டி வெளியிட உள்ளது. வரும் மே மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஏர்பேக் சிஸ்டம் கொண்ட டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா டி ஏர் பைக் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

உலகின் முதல் ஏர்பேக்
பைக்கை ஓட்டுபவருக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் மிக சவுகரியமாக இருக்கும் இந்த ஏர்பேக்தான் உலகின் முதல் வயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்டதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








