மான்ஸ்டர் வரிசையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்திய டுகாட்டி
மான்ஸ்டர் வரிசையில் புதிய டுகாட்டி பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர ரகத்தில் வரும் இந்த புதிய மான்ஸ்டர் பைக் டுகாட்டி பிரியர்களிடம் அதிக ஆவலை தூண்டியிருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 1200 பைக்கைவிட சிறிது பெர்ஃபார்மென்ஸ் மற்றும் குறைந்த விலை கொண்ட மாடலாக வருகிறது. இந்த புதிய மான்ஸ்டர் 821 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 821 சிசி எஞ்சின் 112 எச்பி பவரையும், 89.34 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது.
மான்ஸ்டர் 1200 பைக்கைவிட 2.26 கிலோ குறைவான எடை கொண்டது. பாதுகாப்பு விஷயங்களில் மிகச்சிறப்பாகவே இருக்கிறது.
8 வே அட்ஜெஸ்ட்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், 3 லெவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 லெவல் ஆபிடபிள்யூ ரைடிங் ஆப்ஷன்களுடன் வருகிறது.
வரும் ஜூலை மாதம் அமெரிக்க மார்க்கெட்டில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வருகிறது. விலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








