இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது புதிய டுகாட்டி மான்ஸ்டர் 821!

By Saravana

நடுத்தர ஸ்போர்ட்ஸ் ரகத்தில் மான்ஸ்டர் 821 என்ற புதிய பைக் மாடலை டுகாட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆசிய மார்க்கெட்டுகளுக்கு ஏற்ற வகையில், மான்ஸ்டர் 795 பைக்கை அறிமுகம் செய்வதாக டுகாட்டி சில ஆண்டுகளுக்கு முன் கூறியது.

ஆனால், இப்போதைய சந்தை நிலவரத்துக்கு மான்ஸ்டர் 795 சரிவராது என்று அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது வந்திருக்கும் இந்த புதிய மான்ஸ்டர் வரிசையிலான மிட்சைஸ் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் சில முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


 மிட்சைஸ் மாடல்

மிட்சைஸ் மாடல்

லேட்டஸ்ட் மான்ஸ்டர் 1200 பைக்கின் மினி மாடலாக இதனை வர்ணிக்கின்றனர். இந்த புதிய நேக்டு ஸ்டைல் பைக் கேடிஎம் டியூக் 690 மாடலை எதிர்கொள்ளும். கூடுதல் சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

சர்வீஸ் பிரச்னை

சர்வீஸ் பிரச்னை

இந்த பைக்கை 30,000 கிமீ வரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்று டுகாட்டி தெரிவித்திருப்பதும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மான்ஸ்டர் 821 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 821சிசி எஞ்சின் 112 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

 இருக்கை அட்ஜெஸ்ட்

இருக்கை அட்ஜெஸ்ட்

ஓட்டுபவரின் வசதியை பொறுத்து இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இந்த புதிய டுகாட்டி பைக்கில் 8 வே அட்ஜெஸ்ட்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், 3 லெவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 லெவல் ரைடிங் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த பைக் 179.5 கிலோ எடை கொண்டது.

விலை

விலை

இங்கிலாந்தில் 8,995 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.9.17 லட்சம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தால் விரைவில் வரும் கேடிஎம் டியூக் 690 பைக்குடன் நேரடியாக மோதும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2014, 11:14 [IST]
English summary
Italian manufacturer Ducati has finally unleashed its power packed Monster 821 into the world. The manufacturer has recently unveiled its most powerful naked motorcycle till date the Monster 1200. The motorcycle combines luxury, styling and performance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+