புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் பிரத்யேக படங்கள்!

தேசிய அளவில் விற்பனைக்கு வந்துவிட்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக் தற்போது முக்கிய நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் படலம் நடந்து வருகிறது. நாளை மறுதினம் பெங்களூரில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், அறிமுக நிகழ்வுக்கு இரு தினங்கள் முன்னதாகவே டீலர்ஷிப்புகளுக்கு புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று பெங்களூரில் அனில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் டீலர்ஷிப்புக்கு கொண்டு செல்லப்பட்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக்கை எமது டிரைவ்ஸ்பார்க் ஆங்கில எடிட்டர் ராஜ் படம் பிடித்துள்ளார். ஸ்லைடரில் அந்த படங்களை காணலாம்.


ரகம்

ரகம்

150சிசி ரகத்தில் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இரண்டாவது பைக் மாடல் இது. பிரிமியம் அம்சங்களுடன், ஸ்டைலான டிசைனுடன் இந்த பைக் வந்திருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஜிக்ஸெர் பைக்கில் 154.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 14.59 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

எடை

எடை

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஓர்ட் கிரே மற்றும் டிரைட்டான் புளூ ஆகிய இரண்டு மெட்டாலிக் வண்ணங்களிலும், பியர்ல் மிராஜ் ஒயிட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் கேண்டி ஆந்த்ராஸ் ரெட் என்ற மூன்று இதர வண்ணங்களிலும் கிடைக்கும்.

விலை

விலை

இந்த புதிய பைக் ரூ.72,199 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் ரூ.85,000 ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

யமஹா எஃப்இசட், டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் 150 ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் போட்டிபோடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2014, 17:58 [IST]
English summary
Take a look at the exclusive photos of Suzuki Gixxer from Bangalore. Suzuki Motorcycle India will launch the much awaited Gixxer 155cc motorcycle in Bangalore on 19th Sep 2014. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+