இரண்டாம் நிலை நகரங்களில் ஷோரூம்களை திறக்கும் ஹார்லி டேவிட்சன்!
பெருநகரங்களை தொடர்ந்து தற்போது இரண்டாம் நிலை நகரங்களிலும் புதிய பைக் ஷோரூம்களை திறக்க ஹார்லி டேவிட்சன் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் கால் பதித்து 5 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு புதிய நிறுவனங்களின் வரவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்த்துக் கொள்ளவும், வர்த்தக வளர்ச்சியை கூட்டிக் கொள்ளவும் இரண்டாம் நிலை நகரங்கள் மீது கண் வைத்துள்ளது ஹார்லி டேவிட்சன். டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களில் இரண்டாவது ஷோரூம்களை திறந்திருக்கும் அந்த நிறுவனம் தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் புதிய ஷோரூம்களை திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
சூரத், லூதியானா, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. சூரத் நகரில் இதுவரை 50 ஹார்லி டேவிட்சன் பைக்குகல் இருப்பதாகவும், அங்கு நல்ல வர்த்தக வாய்ப்பு இருப்பதையும், வாடிக்கையாளர் சேவையை மனதில் கொண்டும் புதிய ஷோரூமை திறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








