இந்தியாவில் 2 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்!
வரும் 30ந் தேதி இந்தியாவில் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்ய இருக்கிறது.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகத்துக்கான டீசரையும் வெளியிட்டிருக்கிறது. ஹார்லி டேவிட்சன் சிவிஓ மற்றும் பிரேக்அவுட் லிமிடேட் மாடல்கள்தான் இந்தியா வருகை தர இருப்பது உறுதியாகியுள்ளது.

சிறப்பான கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் கொண்டதாக வரும் ஹார்வி டேவிட்சன் சிவிஓ மோட்டார்சைக்கிள் இந்திய கோடீஸ்வரர்களின் மனதை வெகுவாக கவரும். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவின் கைவண்ணத்தின் உச்சத்தை இந்த மோட்டார்சைக்கிளில் காணலாம். இது டூரர் வகையை சேர்ந்தது.

இதேபோன்று, பிரேக்அவுட் லிமிடேட் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் டிசைனில் மிகச் சிறப்பானதாக இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் ஃபேட்பாய் மாடலுக்கு மேலானதாக நிலைநிறுத்தப்பட உள்ளது. வரும் 30ந் தேதி இந்த புதிய மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.


Click it and Unblock the Notifications








