சவாலான விலையில் விற்பனைக்கு வந்த புதிய ஹார்லி பைக்!
ரூ.4.1 லட்சம் என்ற மிகச் சவாலான விலையில் புதிய ஹார்லி டேவிட்சன் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹார்லி டேவிட்சனின் மிகக் குறைந்த விலை மாடலாக வந்துள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக்கின் விலை நிச்சயம் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்பதில் ஐயமில்லை.

விற்பனை
அடுத்த மாதம் முதல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக் விற்பனைக்கு செல்கிறது. மேலும், ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் 500 பைக்கும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பிளாட்ஃபார்ம்
14 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ட்ரீட் பிளாட்ஃபார்மில் வடிவமைத்து ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்துள்ள புதிய பைக் மாடல் இது.

வடிவமைப்பு
டெல்லி மற்றும் மும்பை உள்பட சர்வதேச அளவில் பல நகரங்களை சேர்ந்த 3,000 பைக் பிரியர்கள் கொடுத்த டிசைன் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
749 சிசி வி ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

ஷோரூம்கள்
நாடு முழுவதும் உள்ள 13 ஹார்லி டேவிட்சன் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








