ஹார்லி டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இன்று அறிமுகம்: தகவல்!

By Saravana

உலக புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரித்துள்ளது. அதன் டீசரும் வெளியாகியுள்ளதால் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் படங்களை இணையதளம் ஒன்றும் வெளியிட்டுள்ளது. அந்த படங்களையும், எமக்கு கிடைத்த தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


ஹார்லியின் முதல் எலக்ட்ரிக் மாடல்

ஹார்லியின் முதல் எலக்ட்ரிக் மாடல்

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

லைவ்வயர்

லைவ்வயர்

லைவ் வயர் என்ற பெயரை சில ஆண்டுகளுக்கு முன் ஹார்லிடேவிட்சன் பதிவு செய்து காப்புரிமை பெற்றுள்ளது. எனவே, இந்த பெயரிலேயே புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஹார்லி அறிமுகம் செய்கிறதாம்.

இன்று அறிமுகம்

இன்று அறிமுகம்

அமெரிக்காவில் முறைப்படி இந்த புதிய ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், விற்பனைக்கு வருவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

உற்பத்தி நிலை

உற்பத்தி நிலை

முந்தைய ஸ்பை ஷாட் படங்களைவிட தற்போது வெளியாகியுள்ள மாதிரிப் படங்களில் இந்த பைக் தயாரிப்பு நிலையை எட்டிய மாடலாக தெரிகிறது. கான்செப்ட் மாடலை காட்டாமல் நேரடியாகவே உற்பத்தி நிலை மாடலை ஹார்லி டேவிட்சன் வெளியிடவுள்ளது.

டிசைன்

டிசைன்

பிற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் போன்று வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இல்லாமல் சாதாரண பைக் மாடல்களை போன்றே மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களையும் சுமந்து வருகிறது.

 ஹெட்லைட்

ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி இண்டிகேட்டர்கள் ஆகியவை புதுமையாக இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பொருத்தப்பட்டிருக்கும்.

 அம்சங்கள்

அம்சங்கள்

மோனோஷாக் அப்சார்பர், இரண்டு பக்கமும் பின் சக்கரத்தை மோட்டார்சைக்கிளுடன் இணைக்கம் ஸ்விங் ஆர்ம் மற்றும் பெல்ட் டிரைவ் கொண்டதாக இருக்கும்.

கூடுதல் விபரங்கள்

கூடுதல் விபரங்கள்

இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை விரைவில் காணலாம்.

 அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

கடந்த ஆண்டு 500சிசி மற்றும் 750சிசி பைக்குகளை அறிமுகம் செய்து அதிர வைத்த ஹார்லி டேவிட்சன் தற்போது எலக்ட்ரிக் பைக்கையும் கொண்டு வருகிறது.

டீசர்

டீசர் வீடியோவை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2014, 15:55 [IST]
English summary

 This is big news, and both expected and unexpected. Big news because its an electric motorcycle coming from a traditional and conservative company like Harley Davidson; expected because it was spotted just a couple of days back and was even confirmed last year; but unexpected because we did not expect it make its official debut this soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+