ஹார்லி டேவிட்சனை அலேக்காக தூக்கிய ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள்
சில மாதங்களுக்கு முன் விற்பனைக்ககு கொண்டு வரப்பட்ட புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் முன்பதிவில் அசத்தி வரும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனையை உச்சத்திற்கு தூக்கியுள்ளது.
ரூ.8,000 மாதத்தவணையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்!
கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு மார்ச் மாதத்தில் முன்பதிவு துவங்கியது. கடந்த மாதம் முதல் டெலிவிரி துவங்கப்பட்டது. கடந்த மாதம் டெலிவிரி துவங்கப்பட்ட நிலையில், முதல் மாதத்திலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனையில் 60 சதவீத பங்களிப்பை இந்த புதிய பைக் மாடல் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் 146 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 361 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. அதில், 210 ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்!
ரூ.4.1 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மாடல். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட புதிய மாடல் என்பது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








