குறைவான விலையில் வந்த புதிய ஹார்லி பைக்குக்கு அமோக முன்பதிவு

By Saravana

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. புனேயில் உள்ள ஹார்லி டேவிட்சன் டீலரில் மட்டுமே 100க்கும் அதிகமான ஹார்லி டேவிட்சன் 750 பைக்குக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு டீலரில் மட்டுமே இந்த கணக்கு. தற்போது நாடு முழுவதும் 13 டீலர்ஷிப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த பைக்குக்கான முன்பதிவு மிக சிறப்பான எண்ணிக்கையில் இருக்கும் என்று தெரிகிறது.

குறைவான விலை

குறைவான விலை

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு அதன் விலைதான் முக்கிய காரணம். ரூ.4.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹார்லி டேவிட்சன் பிராண்டு பைக்கை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரூ.4.60 லட்சம் ஆன்ரோடு விலையாகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 53 எச்பி ஆற்றலையும், 65 என்எம் டார்க்கையும் அளிக்கும் 749சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 150 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லும் கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.30,000 முன்பணமாக பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இந்த பைக்குக்கு சிறப்பு கடன் திட்டத்தை தனியார் வங்கிகள் வழங்குகின்றன.

டெலிவிரி

டெலிவிரி

இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு செப்டம்பரில் டெலிவிரி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கின் அழகை கூட்டிக் கொள்வதற்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களையும் வழங்குவதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2014, 8:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+