பெங்களூர் டு திருப்பதி சாலையை அதிர வைத்த புல்லட்டுகள்...!!

சாலையில் ஒரு புல்லட் சென்றாலே மனதில் ரீங்காரம் அடிக்கும். ஆனால், இங்கே நூற்றுக்கணக்கான புல்லட் மோட்டார்சைக்கிள்கள் சாலையில் சென்றால் எப்படியிருக்கும். நினைத்து பாருங்கள்.

ஆம், சமீபத்தில் பெங்களூர் டு திருப்பதி சாலை புல்லட் மோட்டார்சைக்கிள்களின் சைலென்சர் ஒலியால் அதிர்ந்தது. பெங்களூர், சாங்கே சாலையில் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் அங்கீகாரம் பெற்ற டீலரான சிவிஎஸ் மோட்டார்ஸ் இந்த புல்லட் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இப்படியும் கார் பார்க்கிங் செய்யலாமா?

இந்த அரிதான அணிவகுப்பில் சிவிஎஸ் மோட்டார்ஸ் சிறப்பு அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் டீமின் ஆங்கில எடிட்டர் ஜோபோ குருவில்லாவும் பங்கேற்றார். இந்த புல்லட் அணிவகுப்பிலிருந்து சில துளிகள்.

 அதிகாலை ஆரவாரம்

அதிகாலை ஆரவாரம்

அதிகாலை 5 மணிக்கெல்லாம் சிவிஎஸ் மோட்டார்ஸ் ச்ர்வீஸ் மைய வாயிலில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளுடன் வந்து ஆர்வமாக நின்றிருந்தனர். மேலும், அங்கு ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

 வித்தியாசமான டீலர்

வித்தியாசமான டீலர்

பல டீலர்கள் வர்த்தக நோக்குடன் சுற்றி சுழலும் வேளையில், சிவிஎஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் மயூர் சந்திரசேகர் தனது டீலரின் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்து முன்மாதிரி செயலாக கூறலாம்.

 கம்பீரம்

கம்பீரம்

அணிவகுப்பில் கலந்து கொண்ட சில உரிமையாளர்கள் அனைவரையும் கவர்ந்தனர். அதில் ஒருவரை படத்தில் காண்கிறீர்கள். யார் கம்பீரம் என்று கேட்கும் அளவுக்கு அவரும், அவரது புல்லட்டும் தோற்றத்தில் போட்டிபோட்டன.

அலுக்காத பயணம்

அலுக்காத பயணம்

சிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கிய 350 கிளாசிக் மோட்டார்சைக்கிளில் சென்றபோது எடுத்த படம். எம்ஜி ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு, கே.ஆர்.புரம், கோலார், முல்பகல், பலம்னேர், சித்தூர், கடப்பா பைபாஸ், திருப்பதி, வழியாக திருமலையை அடைந்தது அணிவகுப்பு. மொத்தம் 550 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த பயணம் அமைந்தது.

 முண்டு கட்டிய சேட்டன்

முண்டு கட்டிய சேட்டன்

அணிவகுப்பில் கலந்து கொண்டபோது அறிமுகமான ஒரு புல்லட் உரிமையாளர் ஒருவர் முண்டு கட்டி வந்து பார்ப்பவர்களை கவர்ந்தார்.

சிவிஎஸ் மோட்டார்ஸ் முகவரி

சிவிஎஸ் மோட்டார்ஸ் முகவரி

விற்பனை நிலைய முகவரி

209/1, பேலஸ் அப்பர் ஆர்க்கேட்,

பெல்லாரி சாலை,

பெங்களூர் - 560080

தொலைபேசி எண் - 080- 23618282

சர்வீஸ் மைய முகவரி

நம்பர் 14, சாங்கே சாலை, ஓட்டல் நந்தினி அருகில்,

பெங்களூர் - 560020

தொலைபேசி எண்- 080- 23462266

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2014, 10:06 [IST]
English summary
I recently had the privilege of being invited by Mayur Chandrashekhar, Owner of CVS Motors, to be a part of a special anniversary ride. CVS Motors is an authorised Royal Enfield showroom located in Sankey road, Bangalore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+