அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் கால் பதிக்கும் ஹீரோ!
அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, லீப் ஹைபிரிட் ஸ்கூட்டருடன் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் களமிறக்க முடிவு செய்துள்ளது.
தள்ளுபடியுடன் நியூலான் கார் கேர் செட்!
இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிஇஓ., பவன் முஞ்சால் கூறுகையில்," ஆசிய, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கால் பதித்துவிட்டோம். இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதியில் லீப் ஸ்கூட்டருடன் ஐரோப்பிய நாடுகளில் களமிறங்க உள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தோ அல்லது கையகப்படுத்துவதன் மூலம், அந்த நாடுகளில் களமிறங்க ஹீரோ முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு சந்தைகளில் கால் பதிப்பதற்காக 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹீரோ நிறுவனம் செலவிட உள்ளது.
தற்போது 20 நாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஹீரோ நிறுவனம், 2020ம் ஆண்டிற்குள் 50க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வர்த்தகத்தை துவங்குவதற்கும், 20 புதிய ஆலைகளை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. 2016ம் ஆண்டில் பிரேசில் மட்டும் அமெரிக்க நாடுகளில் கால் பதிக்கவும் முடிவு செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் கூட்டணியில் இருந்தவரை வெளிநாட்டு மார்க்கெட்டுகளில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறங்க முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், ஹோண்டா கழன்று கொண்டதையடுத்து, தற்போது வெளிநாடுகளில் வர்த்தகத்தை துவங்குவதில் ஹீரோ மோட்டோகார்ப் தீவிரம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








