2 புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் ஹீரோ!

By Saravana

அடுத்த மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் ப்ரோ கஃபே ரேஸர் மற்றும் பேஷன் ப்ரோ டிஆர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் என்ற பெயரில் வரும் இந்த புதிய பைக் டிசைனில் மட்டும் கஃபே ரேஸர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Hero Cafe Racer

ஸ்பிளென்டர் ப்ரோ பைக்கில் இருக்கும் அதே 97.2 சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது விற்பனைக்கு கொண்டு வரும்பட்சத்தில் மார்க்கெட்டின் மிக குறைந்த விலை கஃபே ரேஸர் மாடலாக இருக்கும்.

இதேபோன்று, பேஷன் ப்ரோ டிஆர் என்ற பெயரில் வரும் புதிய பைக்கில் ஆஃப் ரோடு டயர்கள், ஹெட்லைட் கிரில், உறுதியான கட்டமைப்பு, முன்புற ஃபென்டர், புஷ் பிளேட், ஹேண்ட் கார்டுகள் மற்றும் பெட்ரோல் டேங்க் பேடுகளுடன் வர இருக்கிறது.

வரும் மார்ச் 31க்குள் இந்த இரு பைக் மாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2014, 15:18 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+