புதிய இரட்டை வண்ணத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய இரட்டை வண்ணத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கு ஏதுவான அம்சங்கள் கொண்ட இந்த ஸ்கூட்டர் மாடல் தற்போது வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணக் கலவை கொண்ட க்ரூவீ மெட்லெ என்ற அசத்தலான இரட்டை வண்ணத்தில் வந்துள்ளது.

பாந்தர் பிளாக், மேக்னடிக் மேட் கிரே, ஃபோர்ஸ் சில்வர், விட்டல் ஒயிட் பிளேஸிங் ரெட் மற்றும் எலக்ட்ரிக் புளூ போன்ற ஒற்றை வண்ணங்களிலும் கிடைக்கும். இந்த புதிய வண்ணங்கள் கொண்ட மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் கிராஃபிக் டிசைனர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது.
எஞ்சினை பொறுத்தவரை எந்த மாற்றங்களும் இல்லை. 8.2 பிஎஸ் பவரையும், 9.1 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.52.360 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








