37 நாட்களில் 1 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்று ஹீரோ சாதனை!
பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை சக்கை போடு போட்டது. இதனால், அந்த நிறுவனம் புதிய விற்பனை உச்சத்தை பதிவு செய்துள்ளது.
ஆம், கடந்த செப்டம்பர் மாதம் 25ந் தேதி நவராத்திரி விழா துவங்கியதிலிருந்து கடந்த மாதம் 31ந் தேதி வரையிலான 37 நாட்களில் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்று ஹீரோ நிறுவனம் விற்பனையில் புதிய சாதனையை பதிவு செய்தது.

தீபாவளிக்கு பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்படும் தந்திராஸ் தினத்தன்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சம் இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்தது. இதுவும் ஒரு புதிய உச்சப்பட்ச விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், அக்டோபர் மாத விற்பனையில் ஹீரோ சரிவை சந்தித்திருப்பதுதான் ஆச்சரியம். கடந்த ஆண்டு அக்டோபரில் 6.25 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதம் 5.75 லட்சம் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.


Click it and Unblock the Notifications








