ஆக்டிவா நெருக்கடி... ஸ்பிளென்டர் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த ஹீரோ முடிவு
இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பல ஆண்டு காலமாக தக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரால் முதலிடத்துக்கு பங்கம் வந்துவிட்டது. இதனையடுத்து, ஸ்பிளென்டரின் நம்பர்-1 இடத்தை தக்க வைப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளை ஹீரோ செய்து வருகிறது.

மேலும், ஸ்பிளென்டர் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. ஸ்பிளென்டர் வரிசையில் விற்பனை செய்யப்படும் ஸ்பிளென்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளென்டர், ஸ்பிளென்டர் ப்ரோ, ஐஸ்மார்ட் ஆகிய மாடல்களின் உற்பத்தியை விற்பனையின் அடிப்படையில் இரு மடங்கு வரை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், நீமரானா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஹீரோவின் 4வது இருசக்கர வாகன ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. அங்கு உற்பத்தி துவங்கும் பட்சத்தில், ஸ்பிளென்டரின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க ஹீரோ முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








