ஆஃப்ரோடு சமாச்சாரங்களுடன் வந்த புதிய ஹீரோ பேஸன் ப்ரோ!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ஹீரோ பேஸன் ப்ரோ டிஆர் பைக்கின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விலையை தவிர்த்து பிற விபரங்கள் ஹீரோ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சாதாரண ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கில் சில கூடுதல் ஆக்சஸெரீஸ்களை கொடுத்து ஆஃப் ரோடு மாடலாக வெளியிட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

ஆஃப் ரோடு டயர்கள், ஹெட்லைட்டுக்கு கீழே ஒட்டினாற் போல் கொடுக்கப்பட்டிருக்கும் ஃபென்டர், எஞ்சினை பாதுகாக்கும் எஞ்சின் கார்டு, கைகளுக்கு பாதுகாப்பு தரும் நக்கிள் புரொடெட்டர், பெட்ரோல் டேங்கில் பிளாஸ்டிக்கிலான முழங்கால் பேடுகள், ஹெட்லைட் கிரில் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. ஹெட்லைட்டுக்கு கீழே ஃபென்டர் வந்துவிட்டதால், நம்பர் பிளேட் ஹெட்லைட் ஸ்கூப்புக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் நிரந்தர அம்சமாக இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

பேஸன் ப்ரோ பைக்கில் இருக்கும் அதே 97.2சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.8 பிஎச்பி பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் அளிக்கும். 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

இந்த புதிய பேஸன் ப்ரோ டிஆர் பைக் நீலம், சிவப்பு, கருப்பு- சிவப்பு ஆகிய மூன்றுவிதமான வண்ணங்களில் கிடைக்கும்.

 கிராமப்புற மார்க்கெட்

கிராமப்புற மார்க்கெட்

இந்த புதிய பைக் கிராமப்புற மார்க்கெட்டை குறிவைத்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டைல் மற்றும் ஆஃப் ரோடு டயர்கள் ஆகியவை கிராமப்புற மார்க்கெட்டுக்கு சிறந்த மாடலாக இருக்கும் என்று ஹீரோ நம்புகிறது. சாதாரண மாடலைவிட சற்று கூடுதல் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


More from DriveSpark

Article Published On: Tuesday, July 15, 2014, 10:04 [IST]
English summary
Hero MotoCorp had showcased several products at this years 2014 Auto Expo held in New Delhi. Among their various reveals was its popular Passion range with the Passion Pro TR, a motorcycle that is based on the Passion Pro by the Indian manufacturer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+