புதுப்பொலிவுடன் புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் விற்பனைக்கு வந்தது
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தனது பைக் மாடல்களுக்கு புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். சமீபத்தில் கிளாமர் பைக்கை இதுபோன்று புதுப்பொலிவு கொடுத்து விற்பனைக்கு கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குக்கும் புதுப்பொலிவு கொடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பைக்கில் சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு, ஒரு முக்கிய வசதி நீக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக்
இதுவரை விற்பனையில் இருந்து வந்த சூப்பர் ஸ்பிளென்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய மாடலில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக்குகள் கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய வசதி
புதிய சூப்பர் ஸ்பிளென்டரில் சைடு ஸ்டான்ட் போட்டிருப்பதை எச்சரிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய வண்ணங்களில் புதுப்பொலிவு பெற்றுள்ளது சூப்பர் ஸ்பிளென்டர்.

எஞ்சின்
இந்த பைக்கில் 9.12 பிஎஸ் பவரையும், 10.35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.53,735 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








