4 வீலர் மார்க்கெட்டில் கால் பதிக்க ஹீரோ திட்டம்!
4 சக்கர வாகன மார்க்கெட்டில் கால் பதிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
இருசக்கர வாகன மார்க்கெட்டில் நம்பர்-1 ஆக இருந்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்காலத்துக்காக பல புதிய திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது.

அதில், புதிய 4 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டமும் இருப்பது தெரியவந்துள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் பேட்டியளித்துள்ளார்.
அப்போது," ஹோண்டா பிரிந்த பிறகு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதை அவர் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும், அனைத்து சவால்களையும் முறியடுத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் சர்வதேச சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளைகளை பரப்பி வருவதாகவும் கூறினார்.
மேலும், 4 சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரிப்பதற்கான திட்டமும் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அதற்கு கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற குவாட்ரிசைக்கிள் ரக 4 சக்கர வாகனத்தை தயாரித்து இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் 4 சக்கர வாகன மார்க்கெட்டில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications