ஹோண்டாவுக்கு செக் வைக்க 2 புதிய ஸ்கூட்டர்களை களமிறக்கும் ஹீரோ!
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்தால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்காக, 2 புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட் அபரிமித வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை பல நிறுவனங்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

இந்தநிலையில், ஆக்டிவாவை முக்கிய அஸ்திரமாக பயன்படுத்தி விற்பனையில் ஹீரோவை விரட்டி வருகிறது ஹோண்டா. இந்த நெருக்கடிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், தனது மார்க்கெட் பங்களிப்பை தக்க வைக்கவும் புதிய ஸ்கூட்டர் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்க உள்ளது.
அடுத்த ஓர் ஆண்டிற்குள் 2 புதிய ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரவி சத் கூறியிருக்கிறார். மேலும், ஆந்திராவில் புதிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை நிர்மாணிக்கவும் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 6வது ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








