12 புதிய மாடல்களை காட்சிக்கு வைக்க ஹீரோ திட்டம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 12 புதிய மாடல்களை காட்சிக்கு வைக்க ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் விலகிய பின்னர் தனது சொந்த பலத்தை காட்டுவதற்கான தளமாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்திக் கொள்ள ஹீரோ திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, புதிய ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில், கான்செப்ட் மற்றும் ஹைபிரிட் மாடல்களும் இருக்கும்.
இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறுகையில்," எங்களது சொந்த தயாரிப்பிலும், கூட்டணி நிறுவனங்களின் ஒத்துழைப்பிலும் உருவான புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
எங்களது வல்லமையை காட்டுவதற்கான சரியான வாய்ப்பாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்த இருக்கிறோம்.
மேலும், நாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் மாடல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் எங்களது எதிர்கால திட்டங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.
தவிர, சூப்பர்பைக் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் எங்களது டீம் ஹீரோ இபிஆர் அணியின் வீரர்களான ஜியாஃப் மே மற்றும் ஆரோன் யேட்ஸ் ஆகியோர் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை தர இருக்கின்றனர்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








