டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 600சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறதா ஹீரோ?
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 600 சிசி பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கல் தெரிவிக்கின்றன.
கூட்டணியிலிருந்து ஹோண்டா பிரிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சொந்த தொழில்நுட்பத்திலான புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது.

புதிய 250சிசி பைக் உள்பட 5 புதிய மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 600சிசி பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹஸ்தூர் என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய பைக் அழைக்கப்படுகிறது. நாளை மறுதினம் இந்த புதிய பைக்கை ஹீரோ அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








