பண்டிகை கால பலன்... ஹீரோவுக்கு செப்டம்பர் ஓஹோ...!!
கடந்த செப்டம்பர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 30 சதவீத கூடுதலாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் 4,68,670 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது.

ஆனால், கடந்த மாதம் விற்பனை 6 லட்சத்தை தாண்டியது. குறிப்பாக, செப்டம்பர் 25ந் தேதி முதல் 30ந் தேதி வரை 5 நாட்களில் மட்டும் 1.7 லட்சம் இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு முறை 6 லட்சத்திற்கும் மேல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6.25 லட்சம் இருசக்கர வாகனங்களையும், கடந்த மே மாதம் 6.02 லட்சம் இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








