மூச்சு முட்ட வைக்கும் ஹீரோ... அடுத்து ஸ்பிளென்டர் கஃபே ரேஸரையும் அறிமுகப்படுத்தியது!
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ பல்வேறு ரகங்களில் புதிய பைக் மாடல்களை தொடர்ந்து வரிசை கட்டி வருகிறது.
புதிய 620சிசி பைக், டீசல் ஹைபிரிட் பைக் என அடுத்தக்கட்டத்துக்கு போயிருக்கும், தற்போது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் கஃபே ரேஸர் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கஃபே ரேஸர் சில மாதங்களுக்கு விற்பனைக்கு வந்த நிலையில், அந்த மாடலை பின்பற்றியே இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் 100சிசி மாடல்
கஃபே ரேஸர் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் முதல் மாடலாக ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் கஃபே ரேஸர் குறிப்பிடப்படுகிறது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றம் இல்லை. ஸ்பிளென்டர் ப்ரோவில் பொருத்தப்பட்டிருக்கும் 97.2 சிசி எஞ்சின்தான் இந்த புதிய பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
இந்த பைக்கின் எஞ்சின் 7.7 பிஎச்பி ஆற்றலையும், 8.04 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

அம்சங்கள்
புதிய ஹேண்டில்பார்கள், பெட்ரோல் டேங்க், வட்ட வடிவிலான ரியர் வியூ கண்ணாடிகள், ஹெட்லைட், பின்புற ஃபென்டர்கள் ஆகியவை ஸ்பிளென்டர் ப்ரோவையும், அதன் கஃபே ரேஸர் மாடலையும் வேறுப்படுத்துகின்றன.

எடை
இந்த புதிய ஸ்பிளென்டர் கஃபே ரேஸர் மாடல் 109 கிலோ எடை கொண்டதுடன் 159 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

சஸ்பென்ஷன்
முன்புறத்தில் ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

வடிவம்
1,935 மிமீ நீளம், 720 மிமீ அகலம் மற்றும் 1,020 மிமீ உயரம் கொண்ட இந்த பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








