ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் வரும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் விலை கசிந்தது!
பைக் மார்க்கெட்டில் முதல்முறையாக ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஸ்பிளென்டர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஹீரோ ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி மாடலில்தான் இந்த ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் வரும் 29ந் தேதி இந்த புதிய பைக் முறைப்படி விற்பனைக்கு வர இருக்கிறது.

பசுமை பைக் மாடலாக ஹீரோ கூறி வரும் இந்த புதிய பைக் மாடலின் விலை கசிந்துள்ளது. ரூ.57,000 விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி பைக்கைவிட இந்த மாடல் ரூ.2,000 கூடுதல் விலையில் வருகிறது.


Click it and Unblock the Notifications








