சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக்
கஃபே ரேஸர் பிரியர்களின் கனவை மிகச்சரியான விலையில் பூர்த்தி செய்வதற்காக புதிய பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான் இந்த புதிய பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

டிசைன்
ஸ்பிளென்டர் பைக்கை அடிப்படையாகக் கொண்டு கஃபே ரேஸர் மாடலாக மாற்றப்பட்டுள்ளது. வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ ரியர் வியூ மிரர்கள், சில்வர் மட்கார்டு, ஸ்போக் வீல்கள் போன்றவை குறிப்பிட்டு கூறலாம்.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 7.7 பிஎச்பி பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் அளிக்கும் 97.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

விலை
ரூ.53,900 டெல்லி ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விலை வித்தியாசம்
ஸ்பிளென்டர் பைக்கைவிட ரூ.4,000 வரையிலும், ஸ்பிளென்டர் ப்ரோ பைக்கைவிட ரூ.1,000 கூடுதலான விலையில் இந்த புதிய கஃபே ரேஸர் மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

குறைவான விலை கஃபே ரேஸர்
உலகின் மிக குறைவான விலை கஃபே ரேஸர் மாடலாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








