ஹீரோ விறுவிறு... டீசல் ஹைபிரிட் ஸ்கூட்டர், புதிய 250சிசி பைக் அறிமுகம்!
டீசல் ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் உள்பட 5 புதிய இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இன்று பார்வைக்கு கொண்டு வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் 15 புதிய தயாரிப்புகளை வெளியிட்ட நிலையில், தற்போது வந்துள்ள மாடல்களும் ஹீரோவின் எதிர்கால சந்தை பங்களிப்பை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கும். புதிய மாடல்கள் குறித்த விபரங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹீரோ லீப்
கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே லீப் பெட்ரோல் ஹைபிரிட் ஸ்கூட்டர் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் 125சிசி எஞ்சின் 11 பிஎஸ் பவரை அளிக்கும். மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லத்தக்கதாக இருக்கும். இதிலும், எலக்ட்ரிக் மோட்டார் துணைபுரியும் என்பதால், இதுவும் ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட்தான்.

ஹீரோ 250சிசி பைக்
ஹீரோ எச்எக்ஸ்250ஆர் என்ற புதிய 250சிசி பைக்கையும் ஹீரோ அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் 31 பிஎஸ் பவரை அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இதில் ஏபிஎஸ் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர்
ஹீரோவின் புதிய 111சிசி ஸ்கூட்டர்தான் டேஷ். இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் 8.5 பிஎஸ் பவரையும், 9.4 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. மொபைல் சார்ஜரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம்
மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் 15.2 பிஎஸ் பவரையும் அளிக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுளளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

டீசல் ஹைபிரிட் ஸ்கூட்டர்
RNT என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டீசல் ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் 13.5 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதில் சிறிய எலக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளதால், ஹைபிரிட் மாடலாக வந்துள்ளது. இதன் ஹெட்லைட்டை தனியாக கழற்றி டார்ச் லைட் போன்று பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








