அடுத்த கட்டத்துக்கு போன ஹீரோ... புதிய 620சிசி பைக்கை அறிமுகப்படுத்தியது!
மாஸ் பைக் மார்க்கெட்டில் முத்திரை பதித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டிலும் களமிறங்க உள்ளது.
இதற்காக, ஹேஸ்டர் என்ற புதிய நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் கான்செப்ட்டை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, புதிய ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான புதிய பைக் கான்செப்ட்டையும், சிம்பிள் சிட்டி என்ற எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டையும் காட்சிக்கு வைத்துள்ளது.

தோற்றம்
இதன் தோற்றம் கேடிஎம் டியூக் வரிசை பைக்குகளின் தோற்றத்தை நினைவூட்டுகிறது.

எஞ்சின்
இந்த பைக்கில் 620சிசி வாட்டர் கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்
அதிகபட்சமாக 9,600 ஆர்பிஎம்.,மில் 80 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

டயர்
17 இஞ்ச் பைரேலி டயாப்லோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹெட்லைட்
ட்வின் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளை கொண்டுள்ளது.

டிஸ்க் பிரேக்
இருபுறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃப்ரேம்
கேடிஎம் பைக்குகள் போன்ற இந்த பைக்கிலும் ட்ரெல்லிஸ் ப்ரேம் பைக்குக்கு கூடுதல் கம்பீரத்தையும், உறுதித்தன்மையும் கொடுக்கிறது.

இயான்
ஹேஸ்டரை போன்று மற்றொரு புதிய கான்செப்ட் பைக் மாடலையும் ஹீரோ காட்சிக்கு வைத்துள்ளது. இது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும்.

அம்சங்கள்
டச் ஸ்கிரீன் கன்ட்ரோல், பைக்கை ஓட்டும்போது அருகில் வரும் வாகனங்களை கண்காணித்து எச்சரிக்கும் வசதி, டிஜிட்டல் திரை கொண்ட ஹெல்மெட் என ஏராளமான புதிய வசதிகள் கொண்டதாக இருக்கிறது.

சிம்பிள் சிட்டி எலக்ட்ரிக் பைக்
ஹீரோ காட்சிக்கு வைத்திருக்கும் மூன்றாவது கான்செப்ட் மாடல் இது. சிம்பிள்சிட்டி என்ற பெயரிலான இந்த புதிய எலக்ட்ரிக் பைக் 35 கிலோ எடை கொண்டது.

அம்சங்கள்
பேட்டரியை தனியாக கழற்றி எளிதாக வீட்டில் சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட்போனை டேஷ்போர்டில் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








