பைக் பிரியர்களை கவர்ந்த டோணியின் பைக் திருவிழா!
டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் பைக் ஃபெஸ்டிவல் இந்தியாவின் இரண்டு நாள் கொண்டாட்டங்கள் இனிதே அரங்கேறின. நாடு முழுவதிலிருந்து வந்த பைக் பிரியர்களை ஏமாற்றம் செய்யாமல் வண்ண மயமான நிகழ்ச்சிகளுடன் இந்த இரண்டு நாள் கொண்டாட்டங்கள் நடந்தன.
பைக் ரேஸ், பைக் ஸ்டன்ட், பேண்ட் இசை நிகழ்ச்சிகள் என இரண்டு நாட்களும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூடன் அதகளப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோணியின் ஹெல்கேட் பைக், அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கவுட் மோட்டார்சைக்கிள்கள் போன்றவை இந்த விழாவின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஈவண்ட் கேபிட்டல் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பைக் திருவிழாவில் பைக் பிரியரும், இந்த திருவிழாவிற்கு காரணகர்த்தாவுமாகிய டோணியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


Click it and Unblock the Notifications








