விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய ஹோண்டா ஆக்டிவா 125!!
இந்த வாரத்தில் புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா நிறுவனம் தனது முதல் 125 சிசி ஸ்கூட்டராக இதனை களமிறக்க உள்ளது. விரைவில் விற்பனைக்கு வருவதால், ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தற்போது இந்த புதிய மாடலையும் தேர்வு பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 8.6 பிஎச்பி ஆற்றலையும், 10.12 என்எம் டார்க்கையும் அளிக்கும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது ஹோண்டாவின் அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் சிக்கனம்
பிற 125சிசி மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய ஆக்டிவா 125 மாடல் 25 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. லிட்டருக்கு 55 கிமீ முதல் 60 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும். மேலும், இந்த புதிய எஞ்சின் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதால், நிச்சயம் மிக சரியான விலையில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்
விருப்பத்தின்பேரில் டிஸ்க் பிரேக் மாடலை வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர, ட்யூப்லெஸ் டயர்கள், டிஜிட்டல் மீட்டர் போன்றவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கிறது. மானேசரில் உள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஆலையில் இந்த புதிய ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும்.

பெயர்
இந்த புதிய 125 சிசி ஸ்கூட்டரை ஹோண்டா ஆக்டிவா ப்ளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது இரு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை
இந்த ஸ்கூட்டர் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








