புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வாங்க நீங்க ரெடியா... முழு விபரத்தையும் கையில புடிங்க!!
புதிய 125சிசி எஞ்சினுடன் வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மீது ஸ்கூட்டர் பிரியர்கள் மத்தியில் பரவலாக ஆவல் எழுந்துள்ளது. ஆக்டிவா பிராண்டின் மீது வாடிக்கையாளர்களுக்கு அந்தளவு நம்பிக்கை இருக்கிறது. எனவே, ஆக்டிவா பிராண்டு பெயரிலேயே இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனை செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஆக்டிவா ப்ளஸ் என்ற பெயரில் இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த புதிய ஸ்கூட்டருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கிவிட்டது. ரூ.5,000 பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஸ்கூட்டரின் விபரங்கள் கசிந்துள்ளன. அதனை உங்களுக்கு ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

இரு வேரியண்ட்டுகள்
ஏவியேட்டர் போன்றே இந்த புதிய ஸ்கூட்டரும் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என்ற வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

வித்தியாசம்
ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் சாதாரண வீல்களும், டிரம் பிரேக்குளும் கொண்டதாக இருக்கும். டீலக்ஸ் வேரியண்ட்டில் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குடன் கிடைக்கும்.

டிஸ்க் பிரேக்
டீலக்ஸ் மாடலில் முன்புற சக்கரத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக்கும். பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய பிரேக் அமைப்பு நிரந்தர அம்சமாக இருக்கும்.

வண்ணங்கள்
கருப்பு, நீலம், வெல்ளை மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வருகிறது.

சக்கரங்கள்
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், ஏவியேட்டர் ஸ்கூட்டரைப் போன்று முன்புறத்தில் 12 இஞ்ச் சக்கரமும், பின்புறத்தில் 10 இஞ்ச் சக்கரமும் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த புதிய ஸ்கூட்டரில் 8.6 பிஎச்பி பவரையும், 10.12 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. வி மேட்டிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

விலை விபரம்
ஆக்டிவா 125 சிசி ஸ்டான்டர்டு மாடல்: ரூ.56,000
ஆக்டிவா 125 சிசி டீலக்ஸ் மாடல்: ரூ.61,000


Click it and Unblock the Notifications








