ஸ்பிளென்டரை 2வது முறையாக ஓவர்டேக் செய்த ஆக்டிவா ஸ்கூட்டர்!!
ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கை விற்பனையில் 2வது முறையாக பின்னுக்குத் தள்ளி நம்பர்-1 இடத்தை பெற்றிருக்கிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கை விற்பனையில் பின்னுக்குத் தள்ளியது ஹோண்டா ஆக்டிவா. இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக கடந்த மாதம் பின்னுக்குத் தள்ளியது ஆக்டிவா.

கடந்த மாதம் 1,77,928 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. அதேமாதத்தில் 1,63,778 எண்ணிக்கையிலான 100சிசி ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. இதில், 125சிசி ஸ்பிளென்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
இதேநிலை நீடித்தால் ஹீரோ ஸ்பிளென்டரிடம் உள்ள நம்பர்-1 இடத்தை ஹோண்டா ஆக்டிவா வெகு சீக்கிரத்தில் பிடித்துவிடும் என்று ஆட்டோமொபைல் துறையின் ஆருடங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற போக்குவரத்துக்கு மிக ஏற்றதாக இருப்பதே ஹோண்டா ஆக்டிவாவின் வெற்றி பயணத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








