டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹோண்டா சிபிஆர் 500ஆர் பைக்!
அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா சிபிஆர் 500ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
தற்போது இந்தியாவில் சிபிஆர் வரிசையில் 150சிசி மற்றும் 250சிசி பைக் மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
இந்த வரிசையில் அடுத்ததாக மிட்சைஸ் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் சிபிஆர்500ஆர் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த பைக்கிற்கு இந்தியாவில் வரவேற்பு இருக்குமா என்பதை அறிந்து கொள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க இருக்கிறது ஹோண்டா.

எஞ்சின்
இந்த புதிய சிபிஆர் பைக்கில் 47 பிஎச்பி பவரையும், 50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 471சிசி பேரலல் ட்வின் எஞ்சின் இருக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டிடிருக்கும்.

எடை
இந்த மிட்சைஸ் ஸ்போர்ட்ஸ் பைக் 193 கிலோ எடை கொண்டது. 1,410மிமீ வீல் பேஸ் கொண்டது.

டிஸ்க் பிரேக்
முன்புறத்தில் 320மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கையும், பின்புறத்தில் 240மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கையும் கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.4 லட்சம் விலையில் ஹோண்டா சிபிஆர்500ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

விற்பனை?
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் இந்த பைக்கிற்கு பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








