பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைப்பு: பைக், ஸ்கூட்டர் விலையை குறைத்த ஹோண்டா!
இடைக்கால பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து, பைக், ஸ்கூட்டர் விலையை ஹோண்டா நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 4 சதவீத வரி குறைப்பின் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் விதத்தில், பைக், ஸ்கூட்டரின் விலையை 4 சதவீதம் குறைத்துள்ளது

ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கின் விலை ரூ.1,600 வரையிலும், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் விலை ரூ.7,600 வரையிலும் குறைந்துள்ளது.
இதேபோன்று, ஸ்கூட்டர்களின் விலையையும் 4 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








