ஹோண்டாவின் புதிய கிராஸ்ஓவர் பைக் கான்செப்ட் பைக்!

கிராஸ்ஓவர் எனப்படும் கலப்பின வகை கார்களுக்கு மார்க்கெட்டில் அதிக மவுசு இருக்கின்றன. இரு வகை பாடி டைப் கொண்ட மாடல்களை இணைத்து உருவாக்கப்படும் இந்த வகை கார் மாடல்கள் டிசைனில் கவர்வதாகவும் இருக்கின்றன. இந்த நிலையில், கிராஸ்ஓவர் டிசைனிலான புதிய பைக் கான்செப்ட்டை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா காட்சிக்கு வைத்திருந்தது.

சாதாரண ரக பைக்குகளின் டிசைன் மாதிரியையும், ஆஃப் ரோடு பைக்கின் டிசைன் மாதிரியையும் இணைத்து சிஎக்ஸ்-01 என்ற இந்த புதிய நேக்டு ஸ்டைல் கொண்டதாக இந்த பைக்கை ஹோண்டா உருவாக்கியுள்ளது. மிக ஸ்டைலாக தோற்றம் கொண்ட இந்த பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 அடக்கமான டிசைன்

அடக்கமான டிசைன்

மிக அடக்கமான டிசைனுடன் உயரமான இருக்கை அமைப்பு ஆகியவற்றின் மூலம், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் எளிதாக ஓட்ட முடியும்.

 கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

போக்குவரத்து மிகுந்த சாலைகள் மட்டுமின்றி, கரடு முரடான சாலைகளில் செல்வதற்கு ஏற்றவாறு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டதாகவும் இருக்கிறது.

 பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

இதனை ஒரு பிரிமியம் பைக் மாடலாக ஹோண்டா உருவாக்கியுள்ளது. எல்இடி டிஸ்ப்ளே, டியூவல் எக்சாஸ்ட், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன், இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் போன்றவை இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.

 இந்தியாவுக்கான மாடல்

இந்தியாவுக்கான மாடல்

இந்த பைக்கின் தயாரிப்பு நிலை குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக் விரைவில் தயாரிப்பு நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கின் எஞ்சின் குறித்த தகவல் இல்லை. ஆனால், 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2014, 12:53 [IST]
English summary
The word crossover is generally associated with four wheelers to refer to vehicles that offer the compactness of a hatchback and the raised, sporty look of an SUV. A cross between two different sorts of vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+