ட்ரீம் வரிசையில் புதிய பைக்கை களமிறக்கும் ஹோண்டா!

By Saravana

ட்ரீம் வரிசையில் புதிய பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வர இருக்கிறது.

ட்ரீம் வரிசையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ட்ரீம் யுகா மற்றும் ட்ரீம் நியோ பைக்குகளுக்கு மேலாக இந்த புதிய பைக்கை நிலைநிறுத்தப்படும்.

Honda Bike

தற்போது ட்ரீம் வரிசை பைக்குகளில் பயன்படுத்தப்படும் 8.25 பிஎஸ் பவர் கொண்ட அதே 109சிசி எஞ்சின்தான் புதிய பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

மஹிந்திரா செஞ்சூரோ போன்று புதுமையான தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. ட்ரீம் வரிசை பைக்குகளில் இருந்து வேறுபடுத்தும் வகையில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் வரும்.

மேலும், அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவற்றோடு, முன்புற சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ரூ.50,000 முதல் ரூ.55,000 இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2014, 9:49 [IST]
English summary
According to reports, Honda Motorcycle will bring out a new commuter motorcycle by the middle of this year. The new bike will belong to the company's Dream series that made up of the Dream Neo and Dream Yuga.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+