இந்த ஆண்டு இறுதியில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் ரிலீஸ்!
இந்த ஆண்டு இறுதியில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
250சிசி மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. ஆனால், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை எந்தவொரு மாற்றங்களும் அந்த பைக்கில் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், சிபிஆர் 250ஆர் பைக்குக்கு மாற்றாக புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக் மாடல் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, இந்தியாவிலும் இந்த புதிய பைக் மாடல் விரைவில் வர இருக்கிறது.
இந்த புதிய பைக் மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 29 பிஎச்பி சக்தியையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.
ஸ்டைலில் தற்போதைய சிபிஆர் 250ஆர் பைக்கை ஒத்திருக்கும். ஆனால், புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக் ட்வின் ஹெட்லைட் கொண்டதாக வருகிறது. எக்ஸ்சாஸ்ட் குழாயும் சிறியதாக்கப்பட்டிருக்கும்.
புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் 3.20 லட்சம் விலையிலும், ஏபிஎஸ் இல்லாத சாதாரண மாடல் ரூ.2.80 லட்சம் விலையிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








