புதிய வண்ணத்தில் ஜொலிக்கும் ஹோண்டா ட்ரீம் நியோ!
புதிய இரட்டை வண்ணத்தில் கலக்கலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் ஹோண்டா ட்ரீம் நியோ பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பியர்ல் அமேஸிங் ஒயிட் என்ற புதிய வெள்ளை நிற வண்ணத்தில் கருப்பு சிவப்பு பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் வந்துள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 4 வண்ணங்களுடன் இது 5வது வண்ணமாக விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ரூ.42,237 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கில் 8.25 பிஎச்பி பவரை அளிக்கும் 109சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








