புதிய வண்ணக்கலவையில் ஹோண்டா சிபி ஷைன் அறிமுகம்!
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் ஹோண்டா சிபி ஷைன் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
125 சிசி செக்மென்ட்டில் ஹோண்டா சிபி ஷைன் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. சிறந்த எஞ்சின், அம்சமான டிசைன் என அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையை தக்க வைக்கும் விதத்தில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களில் ஹோண்டா ஷைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் வண்ணங்களிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணங்கள் மூலம் ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என ஹோண்டா தெரிவிக்கிறது.
ஹோண்டா சிபி ஷைன் பைக்கில் 10 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க்கையும் அளிக்கும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டிஸ்க் பிரேக், அலாய் வீல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதிகளுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








