குஜராத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலை: ஹோண்டா அடிக்கல் நாட்டியது
குஜராத்தில், ஹோண்டா நிறுவனம் அமைக்கும் புதிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்டோர் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அகமதாபாத்திலிருந்து 80 கிமீ தொலைவில் விதால்பூர் என்ற இடத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய தொழிற்சாலையை ஹோண்டா கட்டுகிறது. ஆண்டுக்கு 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஆலையில் இருசக்கர வாகன உற்பத்தி துவங்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆலைதான் உலகிலேயே அதிக ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.
ஹோண்டாவின் முதல் ஆலை ஆண்டுக்கு 1.6 மில்லியன் இருசக்கர வாகனங்களையும், இரண்டாவது ஆலை ஆண்டுக்கு 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களையும், மூன்றாவது ஆலை ஆண்டுக்கு 1.8 மில்லியன் இருசக்கர வாகனங்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
இந்த நிலையில், தற்போது 4வதாக இந்தியாவில் அமைக்கப்படும் புதிய ஆலையின் உற்பத்தி திறன் மூலம் ஆண்டுக்கு 5.8 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா நிறுவனம் பெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications








