ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஹோண்டா திட்டம்

By Saravana

ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இந்தியாவில் உற்பத்தி துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என கருதப்படுகிறது.

உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளன.

வாகன உற்பத்தி துறையிலும் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலாவதாக, ஜப்பானை சேர்ந்த ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Honda CBR 650F

பொதுவாக, ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அசெம்பிள் செய்ய இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை இறக்குமதி செய்யும்போது, அதன் மீது அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அசெம்பிள் செய்யும்போது வரிவிதிப்பு மிக குறைவாக இருக்கும்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலம், மிகச்சரியான விலையில் ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் இந்தியர்களின் கைகளுக்கு கிடைக்கும். இது பைக் பிரியர்களுக்கு சந்தோஷமான தகவலாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 20, 2014, 9:32 [IST]
English summary
Honda now state that they will manufacturer its super sport motorcycle right here in India. This is good news for every motorbike enthusiast in the country. Most manufacturers do not manufacture their bigger bikes in India, they directly import it, which attract loads of taxes and duties.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+