15 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்ற ஹோண்டா டூ வீலர்ஸ்!
15 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவின் அதிவேகமாக வளரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை ஹோண்டா பெற்றுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 14ந் தேதி இந்தியாவில் அடியெடுத்து வைத்தது ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம். இந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் 15 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.

கடந்த 18 மாதங்களில் மட்டும் 5 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவின் மிக வேகமாக வளரும் இருசக்கர வாகன பிராண்டாக மாறியிருக்கிறது. மேலும், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நம்பர்-1 ஆக திகழ்கிறது.
2001ம் ஆண்டு ஹரியானா மாநிலம், மானேசரில் தனது முதல் ஆலையை திறந்த அந்த நிறுவனம் தேவையை கருதி, ராஜஸ்தானில் தபுகெராவிலும், கர்நாடகாவில் நரசப்புராவிலும் புதிய ஆலைகளை திறந்து மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது.
ஆண்டுக்கு 46 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் உற்பத்தி திறனை கொண்ட மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக தற்போது தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








