தந்திராஸ் தினத்தில் 1.65 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்ற ஹோண்டா!
தந்திராஸ் தினத்தில் 1.65 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது ஹோண்டா நிறுவனம்.
தீபாவளி பண்டிகைக்கு முன் வரும் 5ம் நாள் தந்திராஸ் தினமாக கொண்டாடுகின்றனர். வாகனங்களை வாங்குவதற்கு மிகவும் உகந்த தினமாக இதனை குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் தந்திராஸ் தினத்தில் இருசக்கர வாகனங்களை டெலிவிரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தந்திராஸ் தினத்திலும் இருசக்கர வாகன விற்பனை அமோகமாக இருந்தது. இதனை நிரூபிக்கும் வகையில், ஹோண்டா நிறுவனம் 1.65 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தந்திராஸ் தினத்தில் 78,500 இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்றிருந்த ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டு தந்திராஸ் தினத்தில் 1.65 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூட்டர் மட்டுமின்றி, ட்ரீம் வரிசையில் விற்பனை செய்யப்படும் பைக்குகளின் விற்பனையும் வெகுவாக அதிகரித்ததாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துல்லது.


Click it and Unblock the Notifications








