ரகசியமாக டிசைன் செய்த பைக்கின் படங்களை வெளியிட்டது ஹோண்டா!
பரம ரகசியமாக டிசைன் செய்து வந்த தனது புதிய பைக்கின் படங்களை ஹோண்டா வெளியிட்டிருக்கிறது. ஹோண்டா என்எம்4 வல்டஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய பைக் ஹோண்டாவின் இளம் எஞ்சினியர்கள் குழு வடிவமைத்துள்ளது.
அந்த இளமையின் துடிப்பு பைக் டிசைனிலும் வெளிப்பட்டிருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் படங்கள் கான்செப்ட் நிலையிலான வல்டஸ் பைக்கின் மாடல் என்றாலும், உற்பத்தி நிலைக்கு செல்லும் மாடலில் அதிக வித்தியாசங்கள் இருக்காதாம். இந்த புதிய பைக்கின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு
பரந்துவிரிந்த முகப்பு, ஸ்பிளிட் ஹெட்லைட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சேஸீ சிறந்த கையாளுமை கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்
இந்த பைக்கில் 745சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது. ஆட்டோமேட்டிக் மட்டுமின்றி, மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் ஓட்ட முடியும். இந்த எஞ்சினின் திறன் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மைலேஜ்
இதன் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை முழுவதும் எரிபொருள் நிரப்பினால் 297 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

இருக்கை
இந்த பைக்கில் முழுவதுமாக எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பின் இருக்கையை பேக்ரெஸ்ட் போன்றும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்த பைக் எப்போது அறிமுகம் செய்யப்படும், விலை உள்ளிட்ட விபரங்களை ஹோண்டா இன்னும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








