தேவை கருதி பெங்களூர் ஆலையில் ஷைன் உற்பத்தி: ஹோண்டா முடிவு
பெங்களூரில் அமைக்கப்பட்ட புதிய இருசக்கர வாகன ஆலையில், ஷைன் பைக்கை உற்பத்தி செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
125 சிசி செக்மென்ட்டில் ஹோண்டா சிபி ஷைன் பைக்கிற்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. தற்போது ராஜஸ்தானின் தபுகெராவில் உள்ள ஆலையில் இந்த பைக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஷைன் பைக்கிற்கு இருக்கும் அதிக டிமான்ட் காரணமாக கூடதலாக பெங்களூரில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
பெங்களூர் ஆலையில் தற்போது ட்ரீம் யுகா, ட்ரீம் நியோ மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 4வது மாடலாக ஷைன் பைக் உற்பத்தியும் விரைவில் இந்த புதிய ஆலையில் துவங்கப்பட உள்ளது.
பெங்களூர் ஆலையில் ஆண்டுக்கு 12 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








