இந்தியாவில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலை: ஹோண்டா அமைக்கிறது

By Saravana

ஹீரோவை பின்னுக்குத் தள்ளி நம்பர்-1 இடத்தை பிடிக்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலையை ஹோண்டா அமைக்க உள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால், பைக் மார்க்கெட்டைவிட ஸ்கூட்டர் மார்க்கெட் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

Honda Activa

தற்போது நம் நாட்டின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் 27 சதவீதம் ஸ்கூட்டர்கள் விற்பனையாக உள்ளது. இந்த நிலையில், இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா நம்பர்- 1 இடத்தை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.

அந்த இடத்தை அடையும் விதமாக பல புதிய வர்த்த விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறது. அதன்படி, தனக்கு பலம் வாய்ந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்களுக்கு இருக்கும் அதிகப்படியான தேவையை நிறைவு செய்யும் விதத்தில், குஜராத் மாநிலத்தில் மிக பிரம்மாண்டமான ஸ்கூட்டர் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ரூ.1,100 கோடி முதலீட்டில் ஆமதாபாத் நகர் அருகே இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது உலகின் அதிக உற்பத்தி திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆலையாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2014, 10:38 [IST]
English summary
Honda is aiming to become the country's number one two-wheeler manufacturer, and is setting up what will be the world's largest scooter manufacturing unit in Gujarat to achieve this target. This follows the trend of Indians increasingly preferring the easy-to-use nature of scooters over options in other two-wheeler segments.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+